நாகரீகக் குறைவான தீய குணங்கள் - ஆசாரக் கோவை 59
உடம்புநன் றென்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளா ரதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து. 59 ஆசாரக் கோவை
பொருளுரை:
ஒருவரைப் பார்த்து உங்கள் உடம்பு நன்றாக இருக்கிறதென்று சொல்லக் கூடாது.
ஒருவரிடத்தில் உள்ள விளக்கை ஊதி அணைக்கக் கூடாது. அடுப்பில்
ஒரு பொருள் வெந்து கொண்டிருக்கும் போது அடுப்பிலுள்ள நெருப்பை அவியும்படி எடுக்கக் கூடாது.
அந்நெருப்பின் சுடர் தம் மேலே படும்படி குளிர்காய நினைந்து அதனை எடுத்துக் குளிர் காயக் கூடாது.
கருத்துரை: இவையெல்லாம் தீய குணங்களாகவும், மரியாதைக் குறைவாகவும் கருதப்படும்.

