அரும்புகளுக்கு அஞ்சலி

அரும்புகளுக்கு  அஞ்சலி

பூக்களின் மூச்சுக்காற்றில்
வேள்வியாகம்.....

வெளிவரமுடியா கூண்டுக்குள்
வெயிலாய் நீ புகுந்தாய் ......

நெருப்பாக நீ முத்தமிடும்போது
அனல் மூச்சு
விரும்பாத பூக்களின்
முனகல் நீ உணரவில்லையா ?
அவைகளின் அலறல் தான் உன்
காதில் ஒலிக்கவில்லையா?

மழலையின் மெய்
தீண்டும்போது தின்கின்ற போதும்
உயிர் கருகும் வாசம்
உனக்கு கசக்கவில்லையா?

நெய் ருசிக்கும் உனக்கு
பூக்களின் மெய் ருசிக்க
மரணப்பசி வந்ததோ ?

மழலையும்
உருகும் மெழுகென்றே
அணைத்தாயா...?
கண்ணீர் கூட வெளிவராமல்
கதறவிட்டேதடுத்தாயா?

உருகும் மெழுகும்கூட
உறைந்ததால் உயிர்ப்பெறுமே
கருகும் மழலை உயிர்
கரைந்தால்
எப்படி உருப்பெறும் ?

கல்லான கட்டிடமே
இரும்பான இருதயமே
இனியாவது
மரவிடம்போதும்
மறைவிடம் வேண்டாம்
என் மலர்களுக்கும்
மழலைகளுக்கும் .........!!!

நிழல் பெற்றிருந்தால்
நாங்கள் நிலைப்பெற்றிருப்போம்
காக்காத கட்டிடங்கள் வேண்டாம்
கருணை கொண்ட மரங்கள் போதும்
மடித்தாங்கும் தாய் போல.....

காற்றில் மிதக்கும் பூக்களின்
கண்ணீருடன் !!!!

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (16-Jul-14, 11:56 am)
பார்வை : 69

மேலே