என் உயிர் தோழிக்காக

என் உயிர் தோழி ...
பெற்றோர் சூட்டிய பெயரை மறைத்து
நமக்குள் பெயரிட்டு மகிழ்ந்தோம் ...
பள்ளி சீருடையில் நாம்
பரந்து விரிந்து ஆடினோம் ...
கஷ்டங்கள் எவ்வளவு வந்தாலும்
கவலைகள் இல்லா நம் நட்பு ...
பயத்தில் பதுங்கும் உன் கண்கள் ...
சிரிப்பால் சுருங்கிடும் உன் கன்னங்கள் ...
உயிராய் ஒற்றிடும் உன் உதடுகள் ...
அழகை நேர்க்காட்டும் உன் நெற்றிப்பொட்டு ...
சிந்தனைகளை செயலாக்கும் உன் அறிவு ...
உண்மையை உயிராக்கும் உன் மனசு ...
இவை அனைத்தும் கலந்து உருவெடுத்த
என் உயிர் தோழியே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறுவயதில் நான் கையசைக்க பதிலுக்கு
நீ மட்டும் கையசைத்தாய் ...
இக்காட்சிகள் என்றும் என்
மனதில் ஈரஞ்சொட்ட
மனதாற அழைக்கிறேன் தோழி
உன்னை நான் என்று !!!