எது என்ன வாழ்க்கை
இது என்ன வாழ்க்கை .. !
-------------------------------
தினம் சோறு திண்று
திமிராக வாய் பேசி
மனம் போன போக்கில்
மகிழ்சியாய் வாழ்வதாய்
பிறர் என்னும் இந்த வாழ்க்கை
வாழ்ந்திட ஆசையில்லை
சேரியில்
சேருகலந்த சாக்கடையில்
ஔலையில் குடிசை கட்டி
ஔராமாய் படுத்திருக்கும்
ஒன்டிபுலி வீரனுடன்
ஒருத்தனாய் வாழ
ஆசை யெனக்கு !
காலை உணவுக்கு
கடும் உழைப்பு உழைத்தபின்
கலையத்தில் கஞ்சியும்
கடித்திட மிளகாயும் யென
அவன் உண்ணும் உணவினை
அமிர்தம்மென உண்டு வாழ
ஆசை கோடி எனக்கு !
தலைமயிறும் காய்ந்திருக்க
தாவனியுடன்
தள தளத்து நிற்கும்
பேச்சியை காதலித்து
பேரண்பாய் வாழ
பெரும் ஆசை யெனக்கு !
முறை சொல்லி கூப்பிட்டு
பறையடித்து பொங்கலிட்டு
பகிர்ந்துண்டு வாழும்
கூட்டத்துடன் கூடிவாழ
கோடி ஆசை யெனக்கு !
இதைவிடுத்து
காரில் அமர்ந்து
கட்டிய மனைவிக்கு பயந்து
அவள் கண்ஜாடை காட்டுகின்ற
வழியில் சென்று வாழுகின்ற
வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையாமோ !

