என் காதலின் முதல் சந்திப்பு

பேருந்துக்காய் காத்து நின்றேன்
பேருந்து நிலையத்தில்!.
பேருந்து வரவில்லை
பேரழகி வந்தாள்..! .

எள்ளளவும் நினைக்கவில்லை
என்னோக்கி வருவாள் என்று...!,
எண்ணி கூட பார்க்கவில்லை
என்னவளாய் இருப்பாளேன்று....!,

ஆடவனின் மனதுக்குள்ளே
ஆவிப் பிடித்து ஆட்டியதென்ன?
அன்ன நடை நடந்து
அருகில் அவளும் வந்தவுடனே...!,

காற்றில் மெட்டொன்று
காதோரம் கேட்க
இசை வரும் திசை நோக்கி
விசை கொடுத்துத் திரும்பி பார்த்தேன்....!,

மின்சார கன்னியவள்
மின்னல் போல் எனைப் பார்க்க
சம்சாரம் இவள் என்று
சந்தோசம் நான் கொண்டேன்....!.

காந்தப் பார்வை கொண்டு
கன்னியவள் எனை இழுக்க
காதலில் நான் விழுந்தேன் - அவள்
கருவிழிக்குள் சரணடைந்தேன்...

கண்ணை விட்டு அவளும்
கடந்து சென்ற போதிலும்
எண்ணி எண்ணி நான் மகிழ்ந்தேன்
எனக்குள்ளே காதல் வளர்த்தேன்!...............

எழுதியவர் : தங்க மணிகண்டன் (16-Jul-14, 6:55 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 171

மேலே