தவறிவிட்டேன்

காதல் காதல் ?
ஏன் என் வாழ்வில் ?
விதிப் பயனா ?
மெல்ல முடியாமல் ,அள்ளி எறியாமல் ,என் நெஞ்சை சூழ்ந்த கிருமி
காதல் தவறல்ல ,காதலிபவர்கள் தான் காதலை காயப்படுத்துகின்றனர்
என்னவளும் அப்படிதான்,ஏனடி இந்த தண்டனை எனக்கு
உன்னை மனதாற காதலிக்கிறேன்,நீயோ என் மனதை பதம் பார்க்கிறாய் ?
தவறு செய்யாத மனிதன் உண்டா ? செய்த தவறை உன்னிடம் சொன்னதற்கு என் மரணத்தை பரிசாக கேட்கிறாய்? தருகிறேன் தோழி -உன் விருப்பம் ,எனது விருப்பம்
ஒரு தவறுக்கு இன்னொரு தவறு முடிவல்ல ,புரிந்துகொள்
பிரித்து பார்ப்பது காதல் அல்ல ,புரிந்து கொள்வது தான் காதல்
வருந்துகிறேன்,என் காதலை உன்னிடம் சொன்ன நான் , அதை புரிய வைக்க தவறிவிட்டேன்.....