சுயபதிவு

சுயபதிவு

காலம் நாகரிகம் என்ற கரையானின் பிடியில் சிக்கி சீரழிவது மட்டும் அல்லாமல் இயற்கை, பாரம்பரியம, சீரான வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் அரித்துவிட்ட உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பொழுதைக் கழிப்பதும் பாம்பிற்க்கு எஞ்சிய தவளை பொழப்புக்குச் சமம்தான்.

கிராமத்தை மறந்த நகரவாசிகள், லிவ்விங் டுகெதர் ஜோடிகள், பேருந்து பயணத்தை கௌரவ குரைச்சலாக எண்ணும் கூட்டம், வட்டிக்காகவே பிறந்த பேங்க் ஆபீசர்கள், சீரியல் அம்மாக்கள், சாராயக்கடை அப்பாக்கள், அப்பன் சொத்தில் பொழுதைக் கழிக்கும் மகன்கள், அரைகுறை இங்கிலீஷ் தமிழச்சிகள், சொல்வாக்கு மறந்த அரசியல்வாதிகள், நடைஉடையைப் பார்த்து அனுமதிக்கும் வாட்ச்மேன்கள், பன்மடங்கு லாபம் ஈட்டும் சி.இ.ஓக்கள், போலிச்சாமியார்கள், ஹீரோயின்களின் தமிழ், உடலை மறைக்கப் போதுமான துணி வாங்க இயலாத பணக்காரர்கள், டி.வி.எஸ்50ல் கூட மப்ளர் மாட்டித் திரியும் சாகசக்காரர்கள், வார்த்தைக்கு வார்த்தை பிரேன்டேடு எனப்புழங்கும் மாக்கான்கள், உள்ளாடைக்கு கீழே வெளியாடை அணியும் லோ ஹிப் பிரியர்கள் இவை எல்லாமே நாகரிகத்தின் வெளிப்பாடுதான்.

ஒளியிழந்த விவசாயிகள், ஒரு நாளைக்கு இரண்டே
வேளையென்று கையேந்திபவனில் கழிக்கும் வாலிபர்கள், இயந்திரத்ததின் இசையில் வாழும் இன்ஜீனியர்கள், சாலையோர குடிசைவாசிகள், சென்னைக்கு வேலை தேடிச்சென்ற பட்டதாரிகள், பத்துக்கு பத்தில் வசிக்கும் இருபது நண்பர்கள், மாற்றுத் துணி வாங்க முதல்மாசச் சம்பளத்தை எதிர்பார்த்திருக்கும் உழைப்பாழிகள், அரசியல் மாற்றம் வேண்டும் இளைஞர்கள் என பட்டியல் நீண்டு கொண்டேபோகும். நாகரிகம் முழுங்கிவிட்ட காலத்தின் சாயல்தான் எஞ்சிய இவை அனைத்தும். இவர்களின் அவஸ்தையும் வலியும் வேதனையும் காயமும் ஏழேழு ஜனனத்துக்கும் ஆறாதவை. ஒருபோதும் நாகரிகவாசிகளால் உணர முடியாதவை.

தலை வாரும் பாணியில் இருந்து மாறிப்போன காலணியின் வடிவமைப்பு வரை அனைத்திலும் நாகரிகம் தலைவிரித்தாடுகிறது. ஸ்மார்ட் போன், பேஸ்புக், ஜிமெயில், ஆன்ட்ராய்டு, லவ்வர், பாய் பிரண்டு, கேர்ல் பிரண்டு, பிரேக் அப், லிவ்விங் டுகெதர், மால், பார், டிரென்டு, பேஷன், தியேட்டர், பார்மல், கேசுவல், ஆக்சுவலி, சாரி, தேங்க்ஸ், நோ மென்சன், வெல்கம், டேட்டிங், வீக் என்டு என புழக்கத்தில் இருக்கும் வெள்ளயர்களின் நாகரிக வார்த்தைகள் தொடர்வண்டி போல நீண்டு கொண்டேபோகும். இத்தொடர்வண்டியில் தற்செயலாய வந்து ஒட்டிக்கொண்ட பெட்டிதான் "selfie".

சில மாதம் முன்பு நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அலைபேசியின் முன்புறக் கேமராவை பார்த்தபடி நண்பன் பல்லை காட்டி கொண்டிருந்தான். "என்னடா போன பாத்தமேனிக்கு தனியா இலிக்கற..." பல் இழந்த அவன் பாட்டி கூவியது. அருகே போன என் நண்பன் பாட்டியிடம் ஏதோ ஒரு வார்த்தையைக் கூறி திரும்ப சொல்லச் சொன்னான். காற்றுபோன சைக்கிள் டயரை நிரப்பும் அளவுக்கு "ஷ்ஸ்ஸ்ஸ்" என்றாற் போல பாட்டியின் வாயிலிருந்து பெரும் சப்தம். "பாட்டிய என்னடா பன்ன..."னு நான் கேட்க "selfie" எனச் சிரித்தான். அந்த நிமிடம்தான் Selfie என் வாழ்வில் இன்ட்ரோ ஆனது. "என்ன கன்ட்ராவியோ..."னு என் மைன்டு வாய்ஸ் ஓடி முடிப்பதற்குள் கெலவி கற்றியே முடித்தது.


இப்படித்தான் ஒருநாள் கடைக்குப் போகும் வழியில் ஒரு பெண் ஒரு கையில் குழந்தையை வைத்து ஈ காட்டிக்கொண்டிருந்த வேளையில் மறு கை நிகழ்காலத்தை நினைவுகளாக மாற்றிக் கொண்டிருந்தது. கேட்டா... Selfieயாம். பின்புதான் தெரிந்தது குழந்தை மட்டும் அல்ல பொம்மை, நாய், பேய் என எது கிடைத்தாலும் அதேகதிதான்.

முதல் நாள் அலுவலகம், முதல் மாசச் சம்பளம், இயற்கை காட்சிகள், மால்கள், தியேட்டர் இருட்டறைகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், கோவில், குளம் அனைத்தும் Selfieகாகவே படைக்கப்பட்டது போல் மனம் அலறியது. ஏன்டா இப்படின்னு கேட்டா அதற்க்கும் பதில் Selfieதான். ஓசி- வண்டி, சட்டை, ஐபோன் போல சொந்தம் கொண்டாட முடியாத சிலவை Selfieயின் மோகத்திதிற்கு சொந்தமாகின்றன.

இதே சூழ்நிலை நிலவ நானும் வேறு வழியில்லாமல் Selfieங்கற வார்த்தைக்கு பழகிப்போனேன். கழிவறையைத் தவிர கிட்டதட்ட எல்லா இடங்களையயும் அதில் பார்த்துவிட்ட அதிர்ச்சி இன்னும் அடங்கவே இல்லை. முன்குறிப்பிட்ட, குறிப்பிடாத அனைத்து நாகரிக வார்த்தைகளையும் ஒட்டுமொத்தமாக கண்டேன் Selfieயின் ரூபத்தில்.

ஒரு ஆள் போட்டோ எடுக்க மற்றவர்கள் போஸ் குடுத்த காலத்தை நாம் கடந்துவிட்டோமோ என்பதை நினைக்கும்போது உணர்வை எப்படி வெளிக்காட்டுவதென்றே தெரியவில்லை. ஒரு நாள் இரவு முகப்புத்தகத்தை படிக்க நுழைந்தேன். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் அவ்வளவு ஏன் விருப்பம் தெரிவித்த பக்கங்கள் அனைத்திலும் கூட செலிப்ரிட்டியின் Selfieக்கள் தான். அடப்போங்கடான்னு சலித்துக்கொண்டே FIFA2014 பக்கம் போனால் அங்கும் ஒரு selfie !

அர்த்தமில்லாத இந்த Selfieயை சுயபதிவு என அர்த்தப்படுத்துவதற்க்குள் நான்பட்ட பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் !!

எழுதியவர் : நவீன் (16-Jul-14, 8:16 pm)
பார்வை : 292

சிறந்த கட்டுரைகள்

மேலே