பிறப்பிடைப் போற்றி யெனப்படு வார் - ஆசாரக் கோவை 64

பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்
காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார். 64 ஆசாரக் கோவை

பொருளுரை:

அந்தணரும், தவசியரும், சுமையுடையவரும், நோய் கொண்டவரும், பெரியோர்களும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்களும் என்று சொல்லப்பட்ட இவர்களுக்கு மிகவும் வழிவிட்டு ஒதுங்கிப் போனவர்களே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறரால் வாழக்கடவர் என்று சொல்லப்படுவார்.

கருத்துரை: பார்ப்பார், தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-14, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே