கவலையை கருத்தில் கொள்ளாதே
கவலையோ! கவலை!
கண்ணுக்கு புலப்படும், ஏதோ ஒரு வழி
எந்த ஒரு சவாலுக்கும், பதில்
கவலையில் மூழ்கி அதன் ஆழத்தில் விழுந்து
விட்டாலோ, வழிகள் உனக்கு புலப்படாதே
கதவுகள் அனைத்தும் அடைத்திருப்பினும், ஏதோ
ஒரு சிறு சன்னல் தந்திடும் உனக்கு தேவையான
வெளிச்சத்தையே
காற்று அடிப்பது நின்று விட்டது போல தான்
தோணும், ஆனால் நீ தொடர்ந்து சுவாசிக்க
வில்லையா? அந்த காற்று எங்கிருந்து வந்தது?
கடல் அலைகளும் ஓய்வதில்லை, மனிதன் சந்திக்கும்
சவால்களும் நிற்பதில்லை, ஒவ்வொரு அலையும்
கரை தொட்டு மறுபடி பின்வாங்குவது போலே ஒவ்வொரு
சவாலும் உன்னை தாக்கி பிறகு பின் வாங்கிடும்
தேவை என்ன நீ நிம்மதியுடன் வாழ, சவாலை
சந்தித்து அதிலிருந்து வெற்றியுடன் மீள முடியும்
என்ற அசைக்க முடியாத நம்பிக்கை,
மனிதனே, உன்னால் முடியாதது ஏதும் இல்லை,
எத்தனை, எத்தனை சவால்கள் வந்தாலும் வாழ்வினில்
தீர்த்திட முடியும் உன்னால், கவலை கொள்ளாதே,
கடுகளவு தொந்திரவு வந்து விட்டாலும், மலை அளவு
கவலை கொள்வது மனிதனின் இயல்பு
மலை அளவு தொந்திரவை, கடுகென நினைத்து
அணுகு, அது சிறுத்து, தோற்த்து விடும் உன்னிடம்
கவலையை கருத்தில் கொள்ளாதே, கண்ணீரை
வீணாக்காதே