ஓரொலி வெண்டுறை
‘தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே’.
இது மூன்றடியாய், ஈற்றடி இரண்டும் இரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
‘குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய,
‘அழலெரியின் மூழ்கினவால் அந்தோ! அளிய!’ என்றயல் வாழ்மந்தி
கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்’.
இது நான்கடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மின்
செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்’.
இஃது ஐந்தடியாய், ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.
ஈற்றடிகளில் சீர் குறைந்து வந்திருப்பது புரிகிறது. ஓரொலி, வேற்றொலி என்பது புரியவில்லை.

