அன்னையைப் பற்றி

காதலியைப் பற்றி
எழுதினேன் ...........
எழுதியது
கவிதை ஆனது !

நண்பனைப் பற்றி
எழுதினேன் ..............
எழுதியது
சிறுகதை ஆனது !

உறவுகளைப் பற்றி
எழுதினேன் .............
எழுதியது
புதினம் ஆனது !

இன்பத்தைப் பற்றி
எழுதினேன் ........
எழுதியது
ஹைக்கூ ஆனது !

துன்பத்தைப் பற்றி
எழுதினேன் .........
எழுதியது
தொடர்கதை ஆனது !

தந்தையைப் பற்றி
எழுதினேன்........
எழுதியது
படிப்பினை ஆனது !

அன்னையைப் பற்றி
எழுதினேன் ........
எழுதியதெல்லாம்
அழிந்து போனது !
காரணம் ....
கண்ணீர் !



- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (17-Jul-14, 7:50 am)
Tanglish : annaiyaaip patri
பார்வை : 614

மேலே