காதல் பூ

என் மனம் முழுக்க
உன் நினைவையே
நட்டு வைத்தேன்

உன் நினைவென்னும்
விதையை சுற்றி
மனப்பாத்திகளில்
உயிரையே நீராய்
பாய்ச்சினேன்

என்ன மாயம்,
உன் இதயத்தில்
காதல் பூ
கொத்து கொத்தாய்
பூத்ததே!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (17-Jul-14, 4:19 pm)
Tanglish : kaadhal poo
பார்வை : 336

மேலே