ஏன் போனாய்

என் பேச்சில் நீ
மூச்சில் நீ
என் கவிதை நீ
என் உடை நீ
என் பாவனை நீ

வானவில்லும் நீ
என் வானத்தின் மழையும் நீ
இதயத்தின் ஓசையும் நீ
என் உலகத்தின் இசையும் நீ
என் இதயம் பாடும் ராகம் நீ

என் கனவுகளின் இம்சையும் நீ
என் இரவுகளின் சாமரம் நீ
என் வரவுகளின் செலவும் நீ

என் உயிர் வளர்க்கும் அமுதும் நீ
என் உயிர் வாங்கும் நஞ்சும் நீ

என் எல்லாமுமாய் இருந்த நீ
இல்லாமல் போனதேனடி?
என் எல்லாமான நீ
இல்லாததால்
எனையே தொலைத்து
நிர்கதியாய் நிற்கிறேன் .

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (17-Jul-14, 4:55 pm)
Tanglish : aen ponaai
பார்வை : 108

மேலே