படித்ததில் பிடித்தது
கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் மேனேஜர். எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? அப்போ வரும் பாருங்க கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.
சின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவனாவது வாயில நொழையாத ஒரு வெள்ளைகாரன் பேர சொல்றது. அவன் என்ன சொல்லி இருக்கான் சொல்லி தெரியுமா கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு என்ன சொல்லி இருந்தா எனக்கு என்ன? அப்படி என்னடா கருத்து சொல்லி இருக்காரு கேட்ட மரம் வெட்ட ஒரு மணி நேரம் கொடுத்தா அதில் 30 நிமிடம் கோடாலிய கூர்படுத்த செலவு செய்யனுமாம். அது மாதிரி வேலை செய்யரதுக்கு முன்னடி ப்ளான் பண்ணி செய்யனுமாம். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண மரம் வெட்டரவன் தினம் செய்யரது. இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.
அது மாதிரி மீட்டிங் வச்சி வேலை நேரத்துல வெட்டியா எதாவது பேசும். போன வாரம் ஏன் நீங்க அதை தப்பா பண்ணிங்க? சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க? நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன்? நான் பேச ஆரபிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.
என் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா முழு விபரம் கொடுங்க. அரை குறையா டீடேய்ல் சொல்ல வேண்டியது அப்புறம் ஏன் தப்பா செஞ்ச திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா செய்விங்க சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா வேணும் கரைக்டா கேப்ப? தப்பி தவறி அவரு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.
இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை வச்சி சிங்கத்த எல்லாம் நாய் மாதிரி குரைக்க சொல்லுது. ஜால்ரா போடற நாய் எல்லாம் சிங்கம்னு சொல்லி எல்லார் முன்னாடி பாராட்டுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....
இந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). நம்ம கிட்ட வந்து இந்த ரிப்போர்ட் வேனும் சொல்லும். நாமலும் கேனதனமா இவன் பண்ண கொடுமை எல்லாம் மறந்து ராத்திரி பகலா கஷ்ட்டபட்டு ரெடி பண்ணி கொடுப்போம். நம்ம முன்னாடியே அதை கொண்டு கொடுக்கும். பெரிய லூசு சொல்லும் Well done! you did a wonderful job. u all should take him as a example அப்படினு பாரட்டும். இந்த நாய் வாய் எல்லாம் பல்லா சிரிக்கும் வாய் தவறி கூட நான் பண்ணல அதோ ஒரு கேணை நிக்கிறன் பாரு அவன் தான் பண்ணான் சொல்லாதூ. ஆனா ஏதாவது தப்பு இருக்கே கேட்டா அதே மீட்டிங்ல என்னாங்க பார்த்து பண்ண மாட்டிங்களா கேக்கும்.
மேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து.
மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க.
விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான்.
ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.