முகம்
கார்மேகம் அசைந்து செல்லும் கூந்தலடி...
அதனுள் ஊடுருவும் உன் விரல் அழகை
கண்டு ரசிக்கும் தென்றலடி...
உன் கரு விழிகள் அசைந்து செல்லும் அழகை கண்டால்...
மேகத்தில் ஒளிந்து செல்லும் நிலவுக்கும்
வருத்தம் தானடி
பிரம்மனுக்கும் ரசனை அதிகம் பொய் இல்லை...
உன்னை படைத்ததற்காக அவனுக்கு
பட்டம் கொடுத்தால் தவறில்லை...
பட்டம் படைத்ததற்காக அல்ல...
பாரில் பூத்த உன்னை
என் இதய விழிகள் படம் பிடித்ததற்காக....
பிடித்த படம் ... உன் முகம்....

