சாக்கடைக் கடவுளில் சாத்தானின் நான்
நேற்றிரவு
என் கடவுளை
சாக்கடையில் தள்ளி விட்டு
சாத்தனை கூட்டி வந்தேன்.
வெட்கமில்லாத கடவுள்
"இதயமே"
என்று பாடிக் கொண்டு
எங்கள் பின்னால்
மறைந்து வந்தான்.
சாத்தான் சிரித்துக் கொண்டான்.
நானும் தான்.
நாங்கள் மூவரும் ஒன்று என்று
சாக்கடை
சொல்லி போனது
செந்தேள்