திருந்தக் கூடாதா

என்னய்யா தலைலெ கட்டுப் போட்டிருக்கே?
அட என்னத்த சொல்ல. என் மனைவி தூண்டுதல் பொறுக்காம தான் நான் இதுவரைக்கும் லஞ்சம் வாங்கினேன்.மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறப் படிச்சதுக்கப்பறம் நான் திருந்திட்டேன். சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கற்பூர தீபம காட்டி இனிமேல் லஞ்சம் வாங்கமாட்டேன்னு சத்தியம் பண்ணினேன். அத என் மனைவி பாத்ட்டு கோவத்திலெ பூரிக்கட்டையைத் த்லைமேல வீசி எறிஞ்சா. இப்பத் தான் ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டு போட்டு வர்றேன்.
என்னய்யா அநியாயமா இருக்கு. ஒரு மனுஷன் திருந்தக் கூடாதா?