நலந் தரும் நட்பு
என் பள்ளி பருவமதன்
மீள் நினைவுகள் என்னை
ஆட்டிப் படைக்கையிலே
ஞாபகத் துளிர்கள் என் மனமதில்
தளிர் விடுகின்றன.
மறக்கவொண்ணா சம்பவங்கள் நிறைந்தே
என் நினைவுகள் என்றும் பசுமையாய் பகிர்ந்து கொள்ள
எவருமின்றி தளிர்கள் கருக்கு மாப்போல் கருக்கு கின்றது.
என்ன எது நடந்தாலும் சொந்தங் களிடம் பகிர்ந்து கொள்வதற்கில்லை
எவரும் உள்ளத்தைத்தொடும் மக்களிடம் பகிரப் பல உண்டு.
நலந்தரும் நட்பு என்று பலர் நடிக்கயிலே
என் நண்பன் ஓர் திறமைசாலி.
மாறி மாறி வந்த சொந்தங்களெல்லாம் கைவிட்டுப் போகையிலே
மாறி வந்த நட்பு மட்டும் என்னை பிரியாது என்றும் எனது
முடியாப் பந்தத்தை தொடர் கிறது.
எனக்கு உறவை நொந்து வாழ்வதை விட
நலன் தரும் நட்பே சிறந்தது.