தீர்ந்த காதல்

நிலவைப் போலொரு
தனிமைத் துயரின்
தாபங்களின்
இடையே
சீனச் சுவர் ஒன்றாய்
நீள்கிறது
நமக்கான காதல்....
அவரவர் இடத்தில்
இருந்தும்
இடம் மாறிக் கொண்ட
மனப் பிறழ்வின்
முதல் புள்ளி
நீயெனவும்,
மறு புள்ளி
நான் எனவும்
விசும்பும்
ஒரு நீளப் புரியாமை
குளிர் சுமக்கும்
பால் வீதியை
பரிசளிக்கிறது....
முடிவாக முடிவுப்புள்ளி
ஒன்றில்
அனாதையாக
அத்து மீறுகிறது
ஜன்னல் கொண்ட
நம் முதல் சந்திப்பு....

இனி எப்போதுமே இல்லை
கடைசி சந்திப்பு....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Jul-14, 1:16 pm)
பார்வை : 133

மேலே