ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17

குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
- கவியருவி ம.ரமேஷ்
நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது? மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ – காம நினைவுவோ கூட மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (21-Jul-14, 7:42 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 194

மேலே