தேடுகிறேன்
தவழ்ந்து வரும்
காற்றின்
உருவத்தை தேடுகிறேன்!
துள்ளி குதித்து ஓடி வரும்
நீரின்
நிறத்தை தேடுகிறேன்!
பொன்னொளி மிக்க
கதிரவனிடத்தில்
கருமை ஒளி தேடுகிறேன்!
உழவர் காணும் மேகங்களில்
விண்மீன் கூட்டம் தேடுகிறேன்!
எந்தன் வாழ்கையே
மாற்றிய
உங்களைத் தேடுகிறேன்!
(எழுத்து வாசகர்களே!)