காதல்

ஆதாம் ஏவாள்
வித்திட்ட
அறிவியல் விந்தை
ஹார்மோன்களால்
மீட்டப்படும்
சிலிர்த்திடும் சிம்பொனி
அறுவை சிகிச்சை
இன்றி
இதயம் இடமாறும்
காதல் கார்டியாலஜி
காதல் பித்தம்
தலைக்கேறினாள்
நியூட்டனும்
தலைக்கீழ் மிதப்பான்
காதலி
சுண்டுவிரல் தீண்டியதன்
மின்சாரத்தில்
எடிசனும் எகிறுவான்
சீறிவரும் காளையென்பான்
சிறுத்தையென்பான்
அவள் கடைவிழி
பார்வையிலே
கன்றுக்குட்டி ஆகிடுவான்
சிலரது காதல்
காவியம்
பலரது காதல்
காகிதம்
திரைக்காதலை
ஒழித்து
நிஜக்காதல்
புரிவாயடா!!!!!!!