அம்மாவாகிய நான்

எனக்கு முதல் முறை உயிர் கொடுத்தது
என் தாய் !
மறு முறை உயிர் கொடுத்தது
என்னை தாய் ஆகியவள் !

சாப்பிட்டு முடித்தேன்
பசியாராவில்லை !
காரணம் ,
அவள் சாப்பிட மறுப்பதால் !

நான் கவிதை எழுத நினைத்து
பேனாவை எடுத்தேன் ,அதற்கு முன்
அதை வாங்கி அவள் எழுதிவிட்டாள்
" கிறுக்கல் கவிதை" என்னை விட அழகாக !

யார் வேண்டுமென்றாலும்
எந்த மொழியையும் கற்கலாம் ஆனால்
அவளின் மழலை மொழியை கற்றவள்
நான் மட்டுமே !

எழுதியவர் : bhuvanamuthu (22-Jul-14, 5:04 pm)
பார்வை : 187

மேலே