இனமற்ற மழை -நாகூர் லெத்தீப்

போர்க்களம்
இல்லாத ஒற்றுமை
சிறு உள்ளங்களின்
குதூகலம் இதோ
தெருவெங்கும் .........!
ஒற்றுமை
இங்கே மலர்கிறது
தெருவெல்லாம்
நினைகிறது...........!
மனதில் ஒன்றும்
இல்லை இனம் பார்க்க
வயதும் இல்லை.........!
உலகை மறந்து
மகிழ விடாத
அடைமழை
தெருவெங்கும்........!
நீண்ட தூர மனித
பயணம் உயிருக்கு
மகிழ்ச்சி இல்லாத
வாழ்க்கை எதற்கு........!
ஒற்றுமை
விழைந்தால் மத
வேற்றுமை
எங்கே உலகிலே.........!
குழந்தையின்
சிரிப்பிலே வேற்றுமை
இல்லை நீ
ஒற்றுமையாக
வாழ உனக்கு
அறிவுரை........!
இதோ உனது
கண்முன்னே
தெரிகிறது
மகிழ்ந்து ஆடுகிறது.......!
இனத்தை
துறந்து மதம் என்ற
மழையில்
நினையாமல்
வாழடா
மனிதனை பாரடா
ஒன்றாக
வாழ்வதற்கு.........!