கவிஞர்களின் கவனத்திற்கு

வீட்டுல நிம்மதி இல்லீங்க.
கவிதை எழுதவே
வரலிங்க.

கவிதை படிப்போம்னு
நெனச்சுங்க..

கம்பன்ல தொடங்கி
படிச்சேங்க..
கண்ண தாசன்ல
முடிச்சேங்க.

அப்பதான் நெசமா தெரிஞ்சுதுங்க...

அம்புட்டு பயலுகளும்
"வீட்டில நிம்மதி இல்லீங்க..
விரக்தியில பாட்டு படைச்சேங்க" னு
கண்ணீரா விடுறானுவ!
கவிதையா எழுதாறனுவ!

கரெக்டுனு கல்பூரம் அடிப்பேனுங்க ,
கடைசியா சேந்தவன் ராம்வசந்துங்க!

எழுதியவர் : (24-Jul-14, 12:55 pm)
பார்வை : 97

மேலே