ஒரு சேதி
பிரச்சனைகளை மட்டும் நீளமாக சொல்லும் கவிதைகள் வாசிக்கையில் ...
தீர்வுகளை கடைசிவரிகளில்
கண் தேடுகிறது .
அது இல்லையைனில்
பிரச்சனைகளின் காரணங்களையேனும்
கவிஞன் சொன்னானா?
பார்வை யோசிக்கிறது.
இரண்டுமே இல்லாதபோது
வெள்ளைத்தாளில்
எனக்கு ஏதோ
கருப்பு கருப்பாக படுகிறது.