பாலியல் வன்முறை
முற்றும் துறந்த ஞானி கூட
படுக்கை அறையில் மன்மதன் தானோ!!
பாரதி கண்டது புதுமைப்பெண்
ஆண் காண்பது காமப்பெண்ணா ..?
ஆண்களே நீங்கள்
மனிதர்களா ? மிருகங்களா ?
உங்கள் காம வெறி
பச்சிளம் குழந்தையை
கூட விட்டு வைக்கவில்லையே !!
பெண்களாய் பிறப்பது தவறா
ஆண்களுக்கு இல்லாத உறவா !!
உங்களின் காம வெறிக்கு
பெண்கள் என்ன உணவா !!
பெண்மை என்றாலே மலிவா !!
உங்களின் மன நோய்க்கு மது !!
காம நோய்க்கு மாது !!
இவை தான் ஆண்மை
என்றால் எறியும்
தீயில் மாய்த்துவிடு !!
கொடுரனே !!
வள்ளுவன் தந்த
அறத்துப்பால் ,பொருட்பால்
என உன் அன்னை உனக்கு
கற்றுத்தர !!
காமத்து பாலில்
மதி கேட்டு நின்றயாடா !!
காமுறும் அரக்கர்களை
தண்டிக்க
சட்டம் பிரப்பிக்காதது ஏனோ?
பாவிகளை
அறுத்தெரிந்து
பறவைகளுக்கு இரை
ஆக்க வேண்டும்
மதி கெட்டவர்களே
தானாய் திருந்துங்கள்
இல்லையேல்
கள்ளிப்பால் அருந்தி
செத்தொளியுங்கள்.. !!!