சுவரே இல்லாமல் சித்திரம் வரைந்தேன் 555
என்னவளே...
உன் மடிமீது உறங்குவதாய்
நினைத்து...
பாறைகள் மீது
உறங்கினேன் சுகமாக...
மழைமேகம் என் மீது
படும்போதெல்லாம்...
உன் கூந்தலின் தொடுதலாக
உணர்கிறேனடி...
என்னில் நீ வந்த
நாட்கள் முதல்...
சுவரே இல்லாமல்
சித்திரம் வரைந்தேன்...
காற்றே இல்லாமல்
சுவாசித்தேன்...
பார்வையே இல்லாமல்
அழகை ரசித்தேன்...
இவை எல்லாம் கனவு என்று
கண்களை திறந்தேன்...
இவை எல்லாமாக நீ என்
எதிரே நின்றாய்...
கண்களில் காதலுடன்
இதழ்களில் புன்னகையுடன்.....