வெற்றியை நோக்கி - நாகூர் லெத்தீப்
![](https://eluthu.com/images/loading.gif)
வீழ்வதற்கு
இங்கு நான் வரவில்லை
வாழ்ந்து காட்டிட
இதோ
தங்கள் முன்னே.........!
வெற்றியை
நான்
விரும்புகிறேன்
தோல்வியில்லாத
யுகம் எங்கே.........!
விடாமல்
பாடுபடும்
உழைப்பாளினான்
தொடரும் ஒரே
பாதை நான்.........!
வீழ்வதை
விரும்பினால்
வாழ்வதும் விதவையே.........!
துணிந்துவிட்டேன்
துயர் கலைந்துவிட்டேன்
புறப்படுகிறேன்
வெற்றியை நோக்கி.......!
போராட்டம்
இல்லை
என்றால் என்ன உலகம்
எதற்கு சமூகம்.......!
துரத்தும்
தோல்வி ஒருநாள்
வெற்றியை கண்டு
பின்னோக்கி
செல்லும்.......!
முடிவை
விரைவிலே
தெரிந்துகொள்ளும்......!
உலகம் உன்னை
கண்டிட சாதனை
ஒரு கருவியே
சோதனை ஒரு துறவியே........!
விடாது நான்
உன்னை
அழைக்கிறேன்
முன்னேறி நான் நடந்து
செல்ல
வெற்றியை
பறித்துச்செல்ல.........!