என் சுவாசம் காற்றோடு சங்கமிக்கும்

நீ என் இதயத்தில் இருக்கவில்லை
மாறாக என் இதயமாய்தான்
நீ இருந்தாய் என்பது
உனக்கும் தெரியும்.....

உறவினரின் வலையில் நீ சிக்கிய போது
என்னால் முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமல்
என் இதயம் பட்ட வேதனை
அந்த இறைவன் ஒருவன்தான் அறிவான்......

உனக்காக நான் விட்ட கண்ணீர்த் துளிகள்
உன் உறவினரின் பாதங்களுக்கு
பன்னீராய் மாறிய
என் சோகக் கதையும்
உனக்குத் தெரியும்.......

உயிருக்கே மதிப் இல்லாத
இந்த பூமியில்
என் உணர்வுக்கு மட்டும் மதிப்பை
என்னால் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்.....?

இரண்டு உள்ளங்கள்
கலந்து என்ன பயன் ?
நம் உணர்வுகள்
இங்கு சங்கமிக்க வில்லையே.....!

உன் மனம் மட்டும் மாறியதால்
என் தலைவிதியே மாறியது
பேனா பிடித்த என் கை
சில மாதம் பிச்சையும் எடுத்தது.......

வேதங்களில் கூட காணாத வேதனைகளை
உன் பிரிவின் துயரில்
நான் கண்டேன் அன்பே.....

மறப்பதற்கு நீ ஒன்றும்
நான் படித்த பாடமல்ல
என்னால் எழுதப்பட்ட
ஒரு காவியம் நீ.......

என் இதயத்தில் உன் நினைவுகள்
வந்து அடிக்கடி கொடுக்கும்
வலியானது மரண வேதனையையும்
வென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.....

உன் பிரிப் துயரில் நான் படும்
வேதனையை உன்னால் பார்க்க முடிந்தால்
நரகத்தின் ஒரு பகுதியை உன்னால்
இப் பூமியில் பார்த்து விடலாம்......

என் வாழ்க்கை என்னும் தபாலில்
நான் உனது முகவரியை எழுதியதால்
அதனை மீளப் பெறும் தகுதியை
இழந்து தவிக்கின்றேன்
முகவரியற்ற அநாதையாக.......

இன்று இரு மனம் பிரிந்து
அதிலே ஒரு மனம்
திருமணம் முடிக்க தயாராகிவிட்டது
ஆனால் மறு மனமோ
வாசமற்ற மலராய்
பூத்துக் கிடக்கின்றது
மக்களின் பார்வைக்கு அழகாய்.....

உன்னை ஒருவன் சூடும் போது
எனக்கு வலிக்கத்தான் செய்கின்றது
காரணம் என் தோட்டத்தில்
பூத்த ரோஜா நீ என்பதால்.....

நீ தொலைவில் இருந்தாலும்
இப்பொழுதும் என் நினைவில் இருக்கின்றாய்
உன் நினைவை எப்போது
என் இதயம் நிறுத்துமே....?
அப்போது என் இதயம்
இதயத் தடிப்பை நிறுத்தியிருக்கும்.....

எப்போது உன் உருவத்தை
என் கண்கள் மறக்குமோ....?
அதற்கு முன் என் சுவாசம்
காற்றோடு சங்கமிக்கும்.........

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 5:10 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 267

மேலே