நீதான் என்று இருந்தேன்…

என் மூச்சு காற்றே நீ
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!

நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!

என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Jul-14, 9:48 pm)
பார்வை : 452

மேலே