அமுத நிலாவே

அலைகடல் உதித்த பொற்குடமே
அமுதை பொழியும் இள நிலாவே
விண்ணவர் ஆயிரவர் வேண்டி நிற்பார்
கருமுகில் அவுணர் சூழ்ந்து கொள்ள
மின்னல் கொடியாள் அவுணரை விரட்டிட
கங்குலி மோகினி அமுது படைப்பாள்
பாரெல்லாம் பால் அமுது பரவியதே .
=========================================================
NB : மோகினி தேவர்களுக்கு பாற்கடலில் கிடைத்த அமுதை பரிமாறும் புராணத்தை சார்ந்து , ஒரு கற்பனை .