உன் இணக்கத்திற்கான பிணக்கம்
பிணக்கம் என்பதில்
பலரை போல
பொட்டும் கூட
நாட்டமில்லை
எனக்கும்
இருந்தும் ,
அறிந்தே
அடாவடியாய் .
உன்னிடம்
அடிக்கடி கொள்வேன்
பிணக்கம்
ஒவ்வொருமுறையும்
என் பிணக்கம் போக்கி
நல் இணக்கம்
ஆக்கிட முனைகையில்
திட்டவட்டமாய்
திட்டமிட்டு
கணக்கம் கூட்டியே
சுணக்கம்
காட்டிடுவேன்
விதவிதமாய்
வகைவகையாய்
நீ, அரங்கேற்றிடும்
விட்டுக்கொடுக்கும்
விளையாட்டினை
விருப்பமாய்
வேடிக்கை பார்ப்பதற்கே