அன்னைக்கு சமர்ப்பணம்

ஆயிரம் நட்சத்திரங்கள்
நடுவே ஒளிரும்
நிலவின் அழகே அழகு.....

அதுபோல,
ஆயிரம்பேர் அன்பாக
இருந்தாலும்
உன் அன்பிற்கு இணை
எவருண்டு.....

தேய்பிறை காணாத முழுமதி
போன்ற உன் முகத்தில்
தினமும் விழிக்கணும்....

நடிப்பிற்காககூட என்னை
அடிக்க ஓங்காத கைகளை
எதனோடு ஒப்பிடுவேன்...

உன் புன்னகையை கண்ட
பெண்கள் பொன்னகையை
விரும்பமாட்டார்கள்.....

உனது அன்பு முத்தம்
ஒன்றுதான்
எனக்கு கிடைத்த அமிர்தம்.....

எனக்கு அடிபட்டபோது
என்கண்கள் கலங்கும்முன்
உனது கண்களில்
கண்ணீர் துளிகள்......

ஆறுதல் சொல்ல
நீ இருப்பதால்தான்
என்னவோ கவலையும்
காற்றாய் பறக்கிறது.....

நான் வாழ
இரு இதயங்கள்
துடிக்கிறதே.....

உலகமே தெரியாதவளுக்கு
நான்மட்டும் தான் அவளுக்கு
உலகமாம்.....

நான் செல்லும் இடமெல்லாம்
என் நிழல்கள் தொடர்ந்தது
நீ செல்லுமிடமெல்லாம்
என் நினைவுகளை
தொடரசெய்’தாயே’...

கண்ணும் இமையுமாய்
பத்து திங்கள் சுமந்து
என்னை காத்’தாயே’....

என்ன தவம் செய்தேனோ
அன்னையாய்
உன்னை பெறுவதற்கு...

எழுதியவர் : கவிராம் (29-Jul-14, 12:50 am)
பார்வை : 336

மேலே