வறுமை தந்த வசந்தமாளிகை

கணவனை இழந்த ஒரு ஏழை பெண் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு, அந்த பிஞ்சுக்காக பல கஷ்டங்களை சுமக்கிறாள்.என்றாவது தனக்கு மகன் பிறப்பான், தன் கஷ்டங்களை போக்கிவிடுவான் என்ற ஆசையில்.. அவள் ஆசையை அறிந்துகொண்ட அவள் கருவில் உள்ள குழந்தை தன் தாய்ப்படும் துன்பங்களை கவிதையாய் காட்டுகிறது. அந்த கவிதையின் முடிவு என்னவாகும்??? பொறுத்திருந்து பார்ப்போம்.
வறுமை தந்த வசந்தமாளிகை:

என் தாயின் கருவில்
விதையிட்ட தகப்பன்
விலகிப் போனான் விண்ணுக்கு..
அன்றுமுதல்,
கண்ணீர் மட்டுமே
என் தாயின் கண்ணுக்கு...
விதையாய் அவள் வயிற்றில்
விழுந்தனன்..
ஐந்திரு மாதம் அகிம்சையில்
வளர்ந்தனன்...
நீர் குளத்தில் நான் வளர,
வெயில் நிலத்தில் அவள் புரள,
அவளின்,
சிவந்த மேனி கருத்துப்போனது.
செம்பாதாமோ மேலும்சிவந்தது.
"கற்களின் நகல்களாய்"..
வேலை முடித்தவுடன்,
வீடு திரும்பினால், விறகேடுக்க.
ஏரிக்கரையில்,
நெறிஞ்சிமுள் நெஞ்சைக் கிழித்தது.
இருந்தும்,
புன்னகையித்தாள் என் அன்னை.
பிடுங்க இயலா எத்தனையோ முற்கள்
நெஞ்சில் குடியிருக்க
நெறிஞ்சி முள்ளையாவது பிடுங்க முடிந்ததே!!
என்ற நெகிழ்ச்சியில்...
மாலை நேரம்,
கதிரவன் மெல்ல மயங்கியது..
சாலை ஓரம்,
ஒருபிடி நெல்லும் பொங்கியது...
நெல்லுச்சோறு உண்ட மகிழ்ச்சியில்
உறங்கியவள்,
உறக்கக் கதறினால் நல்லிரவில்..
காரணம் அறிந்தேன்.
என் தாயின்
கிழிந்த சே(சோ)லையை
மேலும்,
கிளிக்கவந்த கள்வன் அவன்.
கல்லிட்டே விரட்டினால்
அக்காம நாயை...
"சீதையின் சதை" சேர்ந்தவள் போலும்...
கண்விழித்தால் காலையில்,
கை நனைத்தால் எஞ்சிய கஞ்சியில்.
கெட்டிக்காரி அவள்,
இரவில் நெல்லுச்சோறு.
பகலில் சோற்றின் சாறு(கஞ்சி).
முக்கல்லிட்ட அடுப்பனை.
என்னவள் பெற்ற குடுப்பனை.
சாலையோர குடுத்தனம்.
சாக்கடை மனம் தினந்தினம்..
என் தாய்யவளின் சீதனம்..
"வறுமை" என்னும் நோய்க்கு
"நோபல்பரிசு" பெற்றவள் போலும்...
இத்துனை, இத்துனை
துன்பங்களையும் தன்னுள் கொண்டு,
இந்த பிஞ்சு நெஞ்ச்சுக்காக
வெறும் கஞ்சையுண்டு,
"வறுமையையும் வசந்தகாலமாய்"
மாற்றிக்கொண்டவள் என் அவள்.
இருந்தும்,
கடவுள் விட்டானா,
வறுமைக்கு வளமைச் சேர்த்தான்
"புற்றுநோயை".
காலங்கள் கழிந்தன
என் அகிம்சை
காலமோ முடிந்தது..
அள்ளி எடுத்தவள்கை
ஏனோ அலறியது.
ஆண்மகனாய் பிறந்திருந்தால்
பிச்சை எடுத்தாவது பிளைத்திருபானோ???
"பெண்மகளாய்" பிறந்ததனால்
பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லையே!!!!!
யான் பெற்ற துன்பங்கள்
என்னோடு போகட்டும்..
என் மகள் பெறப்போகும் துன்பங்கள்
இந்த மண்ணோடு போகட்டும்
என்றவள், பொடிநடையிட்டால்..
கள்ளி மரத்தில்
ஊஞ்சல் கட்டி
கண்ணுறங்க வைத்தால்..
கண்விழித்தேன்,
"சொர்கத்தில்"..
என் தாயவளும்,
"என் பக்கத்தில்"....
அடடா!!!!
உண்மையில் இதுதான்,
"வறுமை தந்த வசந்தமாளிகையோ!!!!!".
என்னே! இந்த "வறுமையின் திறமை"..

எழுதியவர் : இராகுல்சாரதி (28-Jul-14, 11:04 pm)
பார்வை : 804

மேலே