புரியாத புதிர்

ஒவ்வொரு வார்த்தையிலும்
நீர் தெளித்துப்போகிறாய்
விஷமா ? அமுதமா?
எனத் தெரியாமல் அருந்திகொள்கிறேன்
என் ஆயுளை நீட்டிப்பதெல்லாம்
நாட்கள் அல்ல......
உன் அன்பெனும்
ஆயுதம் ஏந்திய வார்த்தைகள்தான் ....
எத்தனை முறை குத்திச் சென்றாலும்
உன்னால்
முழுமையடைவதற்க்காய்
உளிகளின் வலிகளை
வாங்கும் சிலையாய் நான்..!!
கவிதாயினி நிலாபாரதி