உதித்த உலகம்

மலரா மொட்டை தலையில் சூடினாள்,
மலர்ந்த பூவை இதழில் சூடினாள்.

பஞ்சு முகத்தில் கண்மை பூசினாள்,
பிஞ்சு முத்தத்தில் பெண்மை பேசினாள்.

இந்த உலகில் இவள் வசிக்கிறாள்,
எந்தன் உலகம் இவளில் வசிக்கிறது.

என்னை பெற்ற தாயின் சாயல் பூசிய,
நான் பெற்ற மகளே,
கருவில் உதித்த (என்) உலகம் நீயடி.

எழுதியவர் : கறுப்புத் தமிழன் (31-Jul-14, 7:37 pm)
Tanglish : uthitha ulakam
பார்வை : 143

மேலே