நறுமுகையே

நிலவினில் உறங்குகிறேன்
உன் இதயத்தில் இருந்து கொண்டு
மழைச் சாரலில் நனைகிறேன்
உன் சுவாசத்தில் இருந்து கொண்டு
உன் வாசம் மீள மீள
என் வாசம் கீழே போக
வச்ச கண்களில்
நீ எனை படிதாயடி
நறுமுகையே நறுமுகையே.
பாலைவனத்தில் நிற்கிறேன்
உன் சுவடுகளை நினைத்து கொண்டு
படும் குழியினில் தவிக்கிறேன்
உன் நெஞ்சான்கூடிலே புதைந்து கொண்டு
உன் காதல் தாக்க தாக்க
என் வழியில் பூக்கள் பூக்க
மிச்ச இதழை
நீ எனக்கு அளிதாயடி
நறுமுகையே நறுமுகையே.
கடலில் குதிக்கிறேன்
உன் விழியை சுமந்து கொண்டு
வானத்தில் பறக்கிறேன்
உன் நிழலை தேடி கொண்டு
உன் மோதல் உருக்க உருக்க
என் பார்வை கேக்க கேக்க
உச்ச கட்டத்தை
நீ என்னில் சிதைதாயடி
நறுமுகையே நறுமுகையே.