காதல் அல்ல இது
காதல் அல்ல இது
கண்ட இடமெல்லாம்
திரைக் காதல் காட்சிகளை
அரங்கேற்றி ஆர்ப்பரிக்க
போலிக் காதலர்களின்
புலனின்பக் களியாட்டம்.
எல்லாம் துடைத்தவர்க்கு
இடம் பொருள் ஏவலபற்றி
எதுவுமே தெரியாது.
விலங்கினும் கீழோர்,
காண்பவர் காறித்துப்பும்
காட்சிப் பொருளாகி,
விரும்பிய வண்ணம்
கூசாமல் பொழுதைக்
கூட்டிக் கழிப்பதையா
காதல் என்போம்?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
