முடிந்த உதவியும் செய்திடுங்கள்

உணவு உடை உறையுளும்
உலகில் தேவை உயிர்களுக்கு !
பிறக்கும் மனிதனும் பூமியில்
பிறப்பில் ஏழையே ஆயினும் !

ஏழை என்பவன் பிழையா
ஏழ்மை என்றும் நிலையா !
இல்லை என்பதே இல்லாவிடின்
இப்புவியில் இன்பமே என்றும் !

வீதிகளே வீடாகுது பலருக்கு
விதிதானா இதற்கும் பதில் !
விண்ணே கூரையாய் ஆகுது
வீணாகிப் போகுது வாழ்வும் !

குழாய் ஒன்றிலே குடும்பமும்
குளமாய் மாறியது விழிகளும் !
தவறென்ன இழைத்தனர் இவரும்
தவறாய் பிறந்தனரா இவ்வுலகில் !

நால்வருக்கு நான்கடுக்கு மாளிகை
நாதியிலா இவர்களுக்கோ வீதியே !
நினைப்பவரும் எவர்தான் இங்கே
நிற்கதியாய் ஆனோரோ இவர்களும் !

உடைந்திட்டேன் கண்டதும் நானும்
உணர்விழந்தேன் நொடிப் பொழுதும் !
வாக்குகள் கேட்போரும் மறந்தனரோ
வாக்குகள் அளிப்போரும் துறந்தனரோ !

வழியொன்று காண்போம் நாமும்
வாழ்ந்திட அவர்களும் நானிலத்தில் !
முடிவெடுங்கள் படிப்போரே இன்று
முடிந்த உதவியும் செய்திடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Aug-14, 2:29 pm)
பார்வை : 99

மேலே