தாய் மண்ணே வணக்கம்
தஞ்சம் என்று வருவோர்க்கு
தயையுடன் பரிவு காட்டும்
தாய்நாடே நம் நாடு
ஆனால் நம் நாட்டில் வாழும்
இத்தனை கோடி மக்களும்
நம் பார்வையில் சமம் தானே ,
இங்கு நிகழும் கொடுமைகளும் அராஜகங்களும்
வன் கொடுமைகளும் நமக்கு புலப்படாதது ஏன் /
பெண் குழந்தைகளும் பெண்களும் முதியோர்களும்
இந்த நாட்டிற்கு என்ன கொடுமை செய்தார்கள் /
மவுனம் கலைத்து விழித்துக் கொள் மனிதா
,கொலை கொள்ளை காமக் கொடூரங்கள்
பொய் பித்தலாட்டங்கள் இன்னும் பல
கொடுமைகள் தாய் நாட்டை அசிங்கபடுத்துகிறதே
தாய் மண்ணே வெகுண்டெழு
உன் சாபத் தீ கொழுந்து விட்டெரியட்டும்
ஒரு தாயின் சாபமும் ஒரு நாட்டின் சாபமும் ஒன்றே
உன் சாபத்தினால் தீயவர்கள் அழியட்டும்
தீமைகள் ஒழியட்டும்
உன் நாட்டில் நல்லவர்களே வாழட்டும்
நன்மைகளே நடந்திடட்டும்
நானிலமும் போற்றிட நம் நாடும் மக்களும்
நலமுடனும் ஒழுக்கத்துடனும் செல்வங்கள்
அனைத்தும் பெற்று பண்புடனே வாழட்டும்
தாய் நாட்டையும் மக்களையும் பேணிக் காப்போம்
தாய் மண்ணே வணக்கம்