மண்ணில் தவழும் என் மடி மீன்- அரவிந்த் C
மண்ணில் தவழும் என் மடி மீன்..
பத்துமாத தவத்தில் பூத்த என் விண்மீன்..
உன் சேஷ்டைகளில் வேதனைகள் தான் மறந்திருக்கிறேன்..
உன் கொஞ்சல் மொழி கேட்கவே காத்திருக்கிறேன்..
ஒற்றை துளி உன் விழியில் கசிந்திடவே..
ஓராயிரம் முறை என் உயிரும் சிதைகிறதே..
புட்டிப்பால் கொடுத்து உன்னை வதைக்க மாட்டேனே..
பாசம் குழைத்து உனக்கு உயிரமுதூட்டி வளர்த்திடுவேனே..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
