மண்ணில் தவழும் என் மடி மீன் -தாய்ப்பால் நாள் போட்டி

மண்ணில் தவழும் என் மடி மீன்
… மடலைத் தேடும் என் மலர் உன்
கண்ணில் புரளும் நீர் துடை வான்
…கனியும் ஆணை நீ இடு காண்.

என்னில் உதித்த புது மதி நின்
… இதழ்கள் பதிக்க முலை தரும் முன்
விண்ணில் கலந்த ஈர உயிர் நான்
… விழுவேன் உனக்காய் மழைப் பால் உண் !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Aug-14, 9:11 pm)
பார்வை : 124

மேலே