மண்ணில் தவழும் என் மடி மீன் - தாய்ப்பால் நாள் போட்டிக்கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணில் வழியும் உயிர் வலி ஏன்
சொல்லில் மொழிந்து என் உயிர் கேள்
என்னில் புதைந்து நிலவில் எடு தேன் ....
நீ உச்சுக்கொட்ட முக்திபெறும் என் ஜென்மம்
நீ உச்சம்தொட சக்திதரும் என் கனவு
உன் பரிமாணத்தில் நிற்கிறது என் பரிபூரணம்
உன்னைவிட ஏதுண்டு என் பெண்மைக்கு பேராபரணம் ...!