மகேசுவரமூர்த்தங்கள் - முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.

சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.

ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.

சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.


அவையாவன

சோமாஸ்கந்தர்
நடராஜர்
ரிஷபாரூடர்
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
பிட்சாடனர்
காமசம்ஹாரர்
கால சம்ஹாரர்
சலந்தராகரர்
திரிபுராந்தகர்
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தட்சிணாமூர்த்தி
கிராதகர்
கங்காளர்
சக்ரதானர்
கஜமுக அனுக்கிரக மூர்த்தி
சண்டேச அனுக்கிரகர்
ஏகபாதமூர்த்தி
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமா மகேஸ்வரர்
அரியர்த்த மூர்த்தி
அர்த்தநாரீஸ்வரர்
நீலகண்டர்


ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.

'அவன் அருளாளே அவன் தாள் வணங்கி' என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (3-Aug-14, 3:45 pm)
பார்வை : 254

சிறந்த கட்டுரைகள்

மேலே