பயம்

மானிடனாய் பிறந்தவனுக்கு
நாளும் பலவிதப் பயம்
சேர்த்து வைத்த சொத்து
திருடப்படுமோ என
பணக்காரனுக்குப் பயம்
எதிர் கட்சி ஆட்சியை
பிடித்து விடுவானோ என
ஆளுங்கட்சிக்குப் பயம்
தன பிள்ளையின்
எதிர் காலம் பற்றி
ஏழைக்குப் பயம்
உலகின் மேல் பற்றுக்
கொண்டவனுக்கோ
மரண பயம்
பொய் சொல்பவன்
உண்மைக்குப் பயம்
நவீன யுகத்தில் ஒன்றும்
அறியா குழந்தைக்கும்
எதோ ஒரு பயம்
இப்போது உலகத்திற்கோ
யுத்த பயம்

எழுதியவர் : fasrina (3-Aug-14, 8:57 pm)
Tanglish : bayam
பார்வை : 983

மேலே