நான் விறகாக

மரமாய் இருந்த
என் இதயத்தில்
தென்றலாய் வீசி,
காதல் பூ பூக்கச்
செய்தாய்...
அது காய்த்து
கனி தரும் முன்னே
உதிர்த்து விட்டாய்
பூவை மட்டுமல்ல
பூவோடு சேர்த்து
மரத்தையும்....
விரட்டி விரட்டி
காதலித்த
நீ பூ மாலையுடன்
உண்மையாய்
காதலித்த
நான் விறகாக...

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (4-Aug-14, 8:06 pm)
Tanglish : naan virakaka
பார்வை : 59

மேலே