அவசரம்மைக் கேட்கிறாள்
அவசரமாய்க் கேட்கிறாள்
ஒருத்தி !
உன்னிடம்
அடகு வைத்த என்
இதயத்தை !
என்னிடம்
மனமில்லையே !
உன்னிடமிருந்து மீட்பதற்கு !
உனக்கு
மாலையிட எண்ணியே மயங்கி
நிற்கிறேன் நான் !
எனக்கு
மாலையிட முயல்வதையே வேலையாக்கிக்
கொண்டிருக்கிறாள் அவள் !
உன்னோடு
வாழ நினைத் துன்
நினைவில் வாழும்
என்னால்
முடியவில்லை என்னோடு வாழ
நினைத்து எனக்காக
உருகும் பெண்ணோடு சேர !
உன்னை
நேசித்து மட்டும் இருந்தால்
யோசித்திருப்பேன் அவளைப் பற்றி !
என் செய்வேன்?
நான் சுவாசித்துவிட்டேன் உன்னை !
உன்னைக்
காதலித்து உனக்கு காதலனாக
முடியாத என்னால்
எப்படி முடியும்
காதலிக்கும் ஒருத்திக்கு கணவனாக !
உன்னை மறந்து என்னை !