பெண்ணின் பெருமை

பெண்ணாக பிறந்து
அன்புச் சகோதரியாக
ஆசைக்கு மகளாக
கணவனுக்கு மனைவியாக
குழந்தைக்கு தாயாக

ஒவ்வொரு பருவத்திலும்
ஒவ்வொரு உறவாக
பாசத்திலே உறவாடி
அத்தனை சொந்தத்திற்கும்
அதிர்ஷ்டம் உள்ள தேவதையாய்
தேங்கி நிற்பாள் உறவுக்குள்ளே

அவளே என் தங்கை
அவளே என் அக்கா
அவளே என் மனைவி
அவளே என் அம்மா
இத்தனைக்கும் மேலே
புது உறவு ஒன்றுண்டு
அவளே என் மருமகள்
இந்த உறவுகள் யாவும் அவளின்
பாசம் நேசம் அன்பு கடமை
இவைகளால் ஆளப் படுகிறது

பெண்கள் போற்றப்படவும்
வாழ்த்தப் படத் தக்கவ்ர்களும்
பெண்களின் பொறுமையை பெருமையை
புரிந்து கொள்வோம் , உணர்ந்து நடப்போம்.

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Aug-14, 1:37 pm)
Tanglish : pennin perumai
பார்வை : 1353

மேலே