விடிய விடிய

விடிய விடிய. ..

அன்பே! ...
உடைந்து போன என்
உள்ளமதில்....
புதைந்து போன உன்
உருவமதை....
சிதைந்து போக விடாமல்
சேமிக்கிறேன் சித்திரமாய்....

உனை வரைந்து பார்க்க
நான் ஓவியனுமல்ல...
உருவத்தை செதுக்கி பார்க்க
நான் சிற்பியுமல்ல. ...
அதனால்....
உனை மவுனமாய் என்
மனக்கண்களிலே ரசித்து
கொண்டிருக்கிறேன்......

துளிர்த்த செடிகளும்
துவண்டு போகும்
துடித்த இதயமும்
மரித்து போகும்...
நம் கண்ணீர் நினைவுகள்
தெரிந்தால். ....


தொலைந்து போன நம்
நினைவுகளை மட்டும்
கோர்த்து கொண்டிருக்கிறேன்
வார்த்தை பூக்களாக.....

உனை சந்திக்கும் நாளில்...
சிவப்பு சூரியனின்
மஞ்சள் கதிர்களை
அள்ளிப் பருகும் இந்த
அழகு பூமி போல
வண்ண மயமாய்
ஒளிரப் போகும் உன்
அனபு முகத்தில்
ஆனந்தம் காண
ஆசையாய் இருக்கிறேன்...

மனம் வீசிடும் முல்லை
மவுனம் காத்திடும் நீ...
வித்யாசம் தெரியவில்லை
உங்களுக்குள்.....

மறைத்து வைத்த என்
எண்ண அலைகள்
மவுனமெனும் சுவர் தாண்டி
மடை திறந்த வெள்ளமாய்...
இமைகளெனும் கரைதாண்டி
உந்தன்
விரல் நனைக்கும் நாளுக்காக
விடிய விடிய காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : நிஷா (5-Aug-14, 8:05 pm)
Tanglish : vidiya vidiya
பார்வை : 158

மேலே